இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு 5400 முழுமையான காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 700 உறுதிகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி உறுமய திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அதிகாரத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
Post a Comment