Ads (728x90)

உலகக்கோப்பை ரி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை ரி20 கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை தென்னாப்பிரிக்காவும், மேற்கிந்தியாவை இங்கிலாந்து அணியும் வென்றன. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பார்படாஸில் இன்று நடைபெற்றது.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடத் தொடங்கினர்.

20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 134 ஓட்டங்களகள் மட்டுமே எடுத்து 47 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget