சலூன் கடையில் நீண்ட நாட்களாக வேலை செய்துவரும் மகாராஜா (விஜய் சேதுபதி) அவருக்கு ஒரு மகள் பள்ளியில் படிக்கிறார். இருவருக்கும் சொந்தமான ஒரு முக்கிய உறவாக லட்சுமி. பள்ளி விளையாட்டு போட்டிகளுக்காக கேம்பிற்கு செல்லும் மகள். அவ்வேளையில் வீட்டில் இருந்த லட்சுமி திருட்டு போகிறது. அதற்காக காவல் துறை உதவியை நாடுகிறார் மகாராஜா. லட்சுமி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் கதை.
50 வது படமாக ஒரு முன்னணி நடிகர் இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்ததற்கே முதலில் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள். நடுத்தர வயது, படம் முழுக்க அவமானங்கள், அடி உதை, இதில் காதில் கட்டுடன், நரை முடி சகிதமாக ஒரு பதின் பருவ மகளுக்கு அப்பா இப்படி எல்லாம் சொன்னாலே மற்ற நடிகர்கள் ஒப்புக்கொள்வார்களா தெரியவில்லை.
ஆனால் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார். நடிப்பில் அசத்துகிறார். மகளிடம் அடங்கி நிற்பது, காவல் நிலையத்தில் எகிறி நிற்பது என படம் முழுக்க விஜய் சேதுபதி நடிப்பில் அவ்வளவு கோணங்கள்.
பாரதிராஜா, அனுராக் கஷ்யப், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, ‘பாய்ஸ்‘ மணிகண்டன், மம்தா மோகன் தாஸ், குழந்தை அக்ஷனா என ஒவ்வொருவருமே சோடை சொல்ல முடியாத அளவுக்கு மேலும் இதற்கு முன்பு பார்த்த படங்களில் இல்லாத அளவிற்கு வித்யாச கதாபாத்திரங்கள். பெரும்பாலும் நான்லினியர் படம் என்றாலே 50-50 வாய்ப்புதான்.
Post a Comment