பார்படொஸ், ப்றிஜ்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் 116 ஓட்டங்களை வெற்றி இலக்கைக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் அணியின் தலைவர் ஜொஸ் பட்லர் 83 ஓட்டங்களை பெற்றார்.
ஐக்கிய அமெரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் கூட்டாக நடத்தும் 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
Post a Comment