Ads (728x90)

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை கொண்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.donets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். அத்தோடு விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி இரவு 9 மணிவரை விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget