Ads (728x90)

அனைவரும் கவலைப்படும் விடயங்களில் தலைமுடி உதிர்வு பிரச்சனை முக்கியமாகிவிட்டது. பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கின்றனர். 

இதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாததே ஆகும். முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் முடி உதிர்தல், அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனை ஏற்படும். அவற்றை எளிய முறையில் கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகள்.

* குளிக்கும் போதோ அல்லது தலைமுடியை காய வைக்கும் போதோ தலைமுடிக்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் முடி உதிர்வு ஏற்படும். இதற்கு லேசான காட்டன் துணியை பயன்படுத்தினாலே போதும்.

* தலைக்கு குளித்த பின்னர் ஹேர் ஜெல்லை தலைமுடி காய்வதற்கு முன்னர் தடவி வருகின்றனர். இதன் காரணமாகவும் முடி உதிர்கிறது. பொதுவாகவே கேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டாம்.

* ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குளிப்பதன் மூலம் தலைமுடி உதிர்வு குறையும். ஆனால் இதை தினமும் செய்தால் முடியில் வறட்சி ஏற்படக் கூடும்.

* கொய்யா இலையை அரைத்து இரவு தூங்குவதற்கு முன் தலையில் தடவி மறுநாள் காலையில் அலசினால் முடி உதிர்தல் குறையும்.

* முள்ளங்கி சாறை தலையின் அடியில் படுமாறு தடவி வந்தால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

* வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.



 

Post a Comment

Recent News

Recent Posts Widget