ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக பொருளாதார சிரமங்களோடு கல்வி கற்கும் மற்றும் இணைபாடவிதானங்களில் விசேட திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்காக அதிபர் புலமைப் பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதனடிப்படையில் க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 6,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
அதிபர் புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
அத்தோடு கொழும்பு மாவட்டத்திற்கு 242 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் புலமைப்பரிசில் பெறும் அனைவருக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையுடன் உரிய புலமைப்பரிசில் எதிர்வரும் 19 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
Post a Comment