Ads (728x90)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்குத் தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்க செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

தேர்தல் பணிகளுக்குத் தேவையான அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை நடத்துவதற்கு அனைத்து மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கடந்த வாரம் அனைத்துக் கிராம உத்தியோகத்தர்களுக்கும் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget