Ads (728x90)

வாடகை வருமான வரியானது அதிக வருமானம் கொண்டவர்களுக்கு மாத்திரமே விதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என்றும் ஒரு வீடு உள்ளவர்கள் இந்த வரி தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேற்படி வாடகை வருமான வரி அதிகளவு வருமானத்தை பெறுபவர்களிடமே அறவிடப்படவுள்ளது. நாட்டில் உள்ள 90 வீதமான வீடுகள் இதில் உள்ளடங்காது. முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படுவர். அந்த வகையில் நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளை பற்றி பயப்பட வேண்டியதில்லை.

ஆனால் நாம் செல்வ வரியை அமுல்படுத்த வேண்டும். அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி வருத்தப்படுவதை நான் அறிவேன். அவர்களுடன் இருக்கும் கோடீஸ்வரர்களை இந்த வரி பாதிக்கிறது என்பதுதான் அதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

 


Post a Comment

Recent News

Recent Posts Widget