சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ளதாகவும் அதன்போது இரண்டாவது மீளாய்வு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வெளிநாட்டு வணிகக்கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஜூலி கோசாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் விரிவான கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்தது, இது 4 ஆண்டு திட்டமாகும்.
Post a Comment