இதன்போது இரணைமடு நீரப்பங்கீடு தொடர்பாக யாழ்.மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாதவாறு ஒரு தீர்க்கமான முடிவினை எட்டுவதற்கான நடவடிக்கைககளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தெளிவுப்படுத்தினார்.
குறிப்பாக இரணைமடு நீரப்பங்கீடு தொடர்பான இறுதிபடுத்தப்பட்ட புதிய நவீன ஆய்வுகளுக்கு அமைவாக சிவில் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.நா. நீர் முகாமைத்துவம், யாழ். பல்கலைக்கழகம், நீர்ப்பாசனத் திணைக்களம், ஐ.நா.உணவு மற்றும் விவசாய அமைப்புக்கள் ஆகிய அமைப்புக்களின் தீர்மானம் மிக்க ஆய்வு அறிக்கையினை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் பெற்றுக்கொண்டதன் பின்னர் முடிவுகள் எட்டப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், அங்கஜன் ராமநாதன், தர்லிங்கம் சித்தார்த்தன், அமைச்சின் செயலாளர் நபீல், நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் தலைவர், பொதுமுகாமையாளர், அரச அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேற்படி விடயம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற தொடர்பாக கடந்த 16.02.2024 ஆம் திகதி உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாக நேற்றையதினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
Post a Comment