வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சூரி சொக்கனாக வாழ்ந்து இருக்கிறார், தன் நண்பன் கர்ணாவிற்கு ஒன்று என்றதும் முதல் ஆளாக யார் என்ன என்று தான் பார்க்காமல், முதல் அடியே தன் அடியாகவும், ஆனால் நேர்மை ஆதி பக்கம் இருப்பதால் விஸ்வாசமா, நியாயமா என்று மனதில் பல துரோகத்தை சுமந்துக்கொண்டு அவர் நிற்குக் இடம் சூரிய ஒரு நடிகனாக பல மடங்கு இந்த படம் உயர்த்தியுள்ளது.
சசிகுமார் தனக்கென்று அளவெட்டு தைத்த சட்டை போல் நண்பன், பாசம், நேர்மை, துரோகம் என கதாபாத்திரத்தில் நிமிர்ந்து நிற்கின்றார், உன்னி முகுந்தனுக்கு மிக முக்கிய தமிழ் படமாகவு இது அமையும்.
“சிறந்த ஆக்ஷன் ட்ராமா திரைப்படம். வலுவான எமோஷன் மற்றும் வெறித்தனமான ஆக்ஷன். சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனின் கதாபாத்திரங்கள் சிறப்பு. இடைவேளை காட்சி, ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸில் சூரியின் சம்பவம்” என்பன சிறப்பு.
Post a Comment