Ads (728x90)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு நபர்கள் கடன் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் வெற்றிபெற்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும், இது நாட்டுக்கு கிடைத்த தனித்துவமான வெற்றி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சவாலான பயணம் தொடங்கிய நாள் முதல், நான் அவ்வப்போது பாராளுமன்றத்தில் அது தொடர்பிலான விடயங்களை முன்வைத்தேன். முதலில் நாங்கள் பின்பற்றி வரும் திட்டங்களை பாராளுமன்றத்தில் விளக்கினோம். அதன் பிறகு நாங்கள் செய்த முன்னேற்றம் குறித்து விளக்கினோம்.

கடந்த ஜூன் 26ஆம் திகதி எது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் மீண்டும் கடனைச் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முடிந்தது.

ஐ.எம்.எப். வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், கடன் மறுசீரமைப்பிற்கான பேச்சுவார்த்தைகளை நாம் ஆரம்பித்தோம். இந்தப் பணிகளுக்குத் தேவையான நிபுணத்துவ அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக லஸார்ட் (Lazard) மற்றும் கிளிபோர்ட் சான்ஸ் (Clifford Chance) சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து பெற்றோம்.

எமது வெளிநாட்டு கடன் 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 10.6 பில்லியன் டொலர் இரு தரப்பு கடன்,11.7 பில்லியன் டொலர்கள் பல்தரப்பு கடன்,14.7 பில்லியன் டொலர் வணிகக் கடன்,12.5 பில்லியன் டொலர் கடன் பிணை முறிகள் மூலம் பெறப்பட்டவை. கடனை வெட்டிவிடுதல், கடன் சலுகை காலம், கடனை மீளச் செலுத்தும் கால அவகாசத்தை நீடித்தல் உள்ளடங்க கடன் மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திலும், வெளியிலும் பலர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் இரு தரப்புக் கடன்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது. எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள், பாரிஸ் கழகம், சீன எக்ஸிம் வங்கி ஆகிய தரப்பினரிடம் இருந்து மீண்டும் கடன் பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

அதேபோல் வெளிநாட்டு கடன் உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிக்க முடியும்.

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலான முயற்சியில் கட்சி, நிற வேறுபாடின்றி இணையுமாறு நாட்டை நேசிப்பவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget