இதன் காய் மற்றும் இலைகளில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. குறிப்பாக முருங்கை காயில் விட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3, பி6 ஆகியவை காணப்படுகின்றன.
இதில் கல்சியம், இரும்புச்சத்து, மங்கனீசு, மக்னீசியம், பொஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், குறைந்த எரிசக்தி, அதிகளவு நார்சத்து, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்திருக்கின்றன.
இது மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகிறது. உடலுக்கு நல்ல வலுவை கொடுப்பதுடன் சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது, வாரத்தில் குறைந்தது இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
முருங்கைக்காய் விதைகளை குழந்தைகள் சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்கிறது. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது. கீல்வாதம் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களும் ஹைப்போடென்ஷன் பிரச்சினை உள்ளவர்களும் முருங்கை இலை, முருங்கை கீரை ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
Post a Comment