28 ஆண்டுகள் கழித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் இன்று வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், கமலுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் பிரியா பவானி ஷங்கர், ஜெகன் உடன் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்க வேண்டும் என போராடுகிறார்.
Youtube சேனல் மூலம் இதை நகைச்சுவையுடன் சேர்த்து செய்து வரும் சித்தார்த் ஒரு கட்டத்தில் நம்மால் எதுவுமே செய்ய முடியாது, இதற்கு இந்தியன் தாத்தா தான் வரவேண்டும் என முடிவு செய்ய இந்தியனை தேடும் பயணத்தில் இறங்குகின்றனர்.
#comebackindian என்கிற காஸ்டேக்கை உருவாக்கி இங்கு நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை இந்தியன் சேனாதிபதிக்கு தெரிவிக்கின்றனர். உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இந்தியனுக்கு இது தெரியவரும் என தொடர்ந்து முயற்சி செய்ய, தைவானில் இருக்கும் சேனாபதி மீண்டும் இந்தியா செல்ல வேண்டும் என முடிவு செய்கிறார்.
இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் கழித்து வரும் வீரசேகரன் சேனாபதியை பிடிக்க வேண்டும் என பொலீஸ் ஒரு புறம் இருக்க, லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்க கூடாது என இந்தியா வரும் சேனாதிபதி என்னென்ன இன்னல்களை சந்தித்தார்? இதன்பின் நடக்கப்போவது என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
Post a Comment