சேவையை விட்டு விலகியதாக கருதப்படும் அறிவிப்பிற்கு அமைய தமது சேவையின்றி ரயில் சேவையை முன்னெடுத்து செல்ல முடியுமாயின் அதனை செய்து காட்டுமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தலைவர் சுமேத சோமரத்ன சவால் விடுத்துள்ளார்.
எங்களுக்கு பயமில்லை. வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார். இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல தொழிற்சங்கங்கள் திரளும். ரயில் நிலைய அதிபர் ஒருவர் கூட இந்த கடிதங்களுக்கு பயப்படப்போவதில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் குறித்து அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே விடுத்த அறிவித்தலுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை முதல் அலுவலக புகையிரதங்கள் உள்ளிட்ட பெரும்பாலான புகையிரத சேவைகள் இடம்பெறாமை காரணமாக, பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment