Ads (728x90)

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான இணைய வழி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த கால அவகாசம் இந்த மாதம் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் இன்று 10ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இது நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

12ஆம் திகதிக்கு பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் எந்தவொரு காரணத்துக்காகவும் நீடிக்கப்படாது எனவும் பரீட்சைத் திணைக்களத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget