Ads (728x90)

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இன்னும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு இறுதி அறிவிப்பை விடுத்துள்ளது.

பாராளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு ஆணைக்குழு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது. இதுவரையில் தமது சொத்துக்கள் மற்றும் கடன் விபரங்களை கையளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும், அதேவேளை அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அத்தகைய பிரகடனங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு கூடுதல் கட்டணம் விதிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget