Ads (728x90)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி புலமைப் பரிசில்” திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டில் 116,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

க.பொ.த. உயர்தரம் கற்கும் 6,000 மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.6,000 வீதம் 24 மாதங்களுக்கும், தரம் ஒன்று முதல் 11 வரையான 100,000 மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.3,000 வீதம் 12 மாதங்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்ட மாணவருக்கு புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. ஏனைய 24 மாவட்டங்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு 12 ஆம் திகதி முதல் முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget