Ads (728x90)

ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான விதிமுறைகள் வெளியிடப்படும் திகதி, வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி மற்றும் வாக்களிக்கும் திகதி குறித்த விசேட வர்த்தமானியை நாளை வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் ஏனைய அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு நபர்கள் மற்றும் கட்சிகள் வெளியிடும் அறிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எவ்வித பொறுப்பும் இல்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget