ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டும். ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், இது தொடர்பில் தேவையான மேலதிக நடவடிக்கைகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு தடவைகள் ஆசிரியர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்பட்ட போதிலும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். நாட்டின் தற்போதைய நிலையில் வேதனத்தை அதிகரிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே எதிர்கால பிள்ளைகளின் நலன் தொடர்பில் ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment