Ads (728x90)

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில்  இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்திற்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை 10 விக்கெட்களால் வெற்றி கொண்ட நடப்பு சம்பியன் இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், சுழல்பந்துவீச்சாளர் ராதா யாதவ் ஆகிய இருவரும் தங்களிடையே 6 விக்கெட்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு அடிகோலினர்.

இந்த வெற்றியுடன் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் சகல இறுதிப் போட்டிகளிலும் விளையாடுவதை இந்தியா மீண்டும் உறுதி செய்துகொண்டது.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.


Post a Comment

Recent News

Recent Posts Widget