கண்களின் இமை அழகாவும், அடர்த்தியாகவும் இருந்தால் அது ஒருவரின் முக அழகையும் அதிகரிக்கும். கண் இமைகளை அழகு செய்ய, தூங்குவதற்கு முன் ஆலிவ் எண்ணெயை கண்ணின் இமைகளில் தடவி கொண்டு உறங்குங்கள். இது கண்களுக்கு குளிர்ச்சி தருவதோடு அடர்த்தியான கண் முடிகளையும் தரும்.
கண்ணின் இமை சார்ந்த பிரச்சினைக்கு இந்த கற்றாழை நன்கு உதவும். கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்து கொண்டு, அவற்றை இமைகளில் தடவி வந்தால் கண் இமைகள் அழகாக வளரும். அத்துடன் கண்ணின் அழகிற்கு பெரிதும் இது பயன்படுகிறது. மேலும், கண்ணில் ஏற்படும் தொற்றுகளையும் இது தடுக்கும்.
பல காலமாக நாம் கண்ணை பாதுகாக்க இந்த வெள்ளரிக்காயைத்தான் பயன்படுத்தி வருகின்றோம். வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி கண்ணில் வைத்து 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கண்ணை கழுவினால் கண் மிருதுவாகும். மேலும் இதில் உள்ள காபிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் கண் வீக்கம், கண் எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும்.
எந்த வயதினராக இருந்தாலும் சீரான தூக்கம் அவசியம் வேண்டும். இல்லையென்றால் இது அவர்களின் கண்களை பெரிதும் பாதிக்கும். 7 மணி நேர தூக்கம் இருந்தாலே கண் சார்ந்த பல கோளாறுகளை வர விடாமல் தடுக்கலாம். அதிகாலையில் விரைவாக எழுந்து, இரவில் விரைவாக உறக்கினாலே கண் மிக அழகாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Post a Comment