14 ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானியால் தொழிலாளர் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் புதிய பிரதமராக கியெர் ஸ்டார்மர் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மத்திய-இடது தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 410 இடங்களில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் 2024 பிரித்தானியா பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 410 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 119 இடங்களிலும், ஏனைய கட்சிகள் 112 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதன.
பிரிட்டானிய தொழிலாளர் கட்சித் தலைவரான கியெர் ஸ்டார்மர் முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞராகவும், அரச வழக்குரைஞராகவும் பணியாற்றியவராவார். 61 வயதான ஸ்டார்மர் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில் பிரிட்டானிய பிரதமர்களில் மிகவும் வயதான நபராக இருப்பார். ஸ்டார்மர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment