Ads (728x90)

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவர் லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று  பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

உமா குமரனை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல் 3,144 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget