உலகளவில் உணவு உற்பத்தி செய்யும் அளவையும், உலக மக்கள் உட்கொள்ளும் அளவையும் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) குழு உணவுக் கழிவு குறியீட்டு அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.
குழுவின் அறிக்கைப்படி உலகில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உண்ணாமல் வீணடிக்கப்படுகிறது. இந்த உலகளாவிய உணவு விரயம் என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மதிப்பீடுகளின்படி உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வு (Green house gas emissions) களில் 8-10 வீதம் உட்கொள்ளப்படாத உணவுகளால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம், இயற்கை, பல்லுயிர் இழப்பு, மாசு மற்றும் கழிவு போன்ற நெருக்கடியை சமாளிக்க உணவு முறை சீர்திருத்தம் முக்கியமானது என்று சுற்றுச்சூழல் திட்ட குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உற்பத்தி மற்றும் உட்கொள்ளும் உணவுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் வீடுகளில் உணவை பெரிதும் வீணடிப்பதால் தான் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. மக்கள் அனைவரும் தங்கள் சாப்பிடும்போது விட்டுச்செல்லும் சிறு சிறு அளவிலான உணவு விரையம் தான் மொத்தத்தில் அதிகமான உணவு கழிவாக மாறுகிறது.
உணவுக் கழிவு நெருக்கடியைச் சமாளிக்க UNEP பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிலையான உணவு முறைகள் திட்ட அதிகாரி கிளெமென்டைன் ஓகானர் (Clementine O'Connor) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் 2013 இல் திங்க் ஈட் சேவ் (Think Eat Save) உலகளாவிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது.
பசியும் பட்டினியும் வாட்டி மக்கள் இறக்கும் அதே நேரத்தில் தான் உணவு விரயங்களும் நிகழ்கிறது. உணவை வீணடிக்கும் போது ஒரு நொடி பசியால் வாடும் மக்களை சிந்தித்து பாருங்கள். அதன் பின் உணவை வீணடிக்க மனம் வராது. உணவு மிச்சம் அனால் அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து பழகுங்கள்.
Post a Comment