பிரிட்டனின் பென்ஹால் கிரீன் கிராமத்தைச் சேர்ந்த மானெட் பெய்லி எனும் மூதாட்டி தனது 102 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்தச் சாகசத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
மூன்று தொண்டு நிறுவனங்களுக்குப் பணம் திரட்டுவதற்காகவும் இந்தச் சாதனை முயற்சியை அவர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானெட் பெய்லி 2,100 மீற்றருக்கும் அதிகமான உயரத்திலிருந்து குதித்து இந்தச் சாகசத்தைப் புரிந்ததாகவும், இந்தச் சாதனை முயற்சியின் மூலம் 30,000 பவுண்ஸ் திரட்ட திட்டமிட்டிருந்ததாகவும், 14,000 பவுண்ஸ் திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர் இதன்மூலம், 2017ஆம் ஆண்டு மே மாதம், 101 வயது முதியவர் வெர்டுன் ஹேஸ் நிகழ்த்திய சாதனையை முறியடித்து அதிக வயதில் வான்சாகசத்தில் ஈடுபட்ட பிரிட்டனைச் சேர்ந்தவர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
Post a Comment