நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி என பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தி கோட் வெளியாகவுள்ளது. தி கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபி தொழில் நுட்பத்திலும் வெளியாகவுள்ளது.
Post a Comment