Ads (728x90)

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன.

குறித்த கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று காலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்ற போதே மேற்படி ஐக்கிய மக்கள் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் சகலருக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டும் என்ற மகுடத்தின் கீழ் இடம்பெற்ற மேற்படி கைச்சாத்திடும் நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகரவின் தரப்பு உட்பட 8 கட்சிகள் பிரதான பங்காளிகளாக இணைந்துள்ளன.

அதேபோன்று நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget