Ads (728x90)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பொதுவேட்பாளராக முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பு தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும், பொது வேட்பாளர் தெரிவுக்கான குழுவின் உறுப்பினருமான ஶ்ரீகாந்தாவால் வெளியிடப்பட்டது.

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் 7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் சார்பில் கைச்சாத்திடப்பட்டது. 

இதில் 7 தமிழ் சிவில் அமைப்புக்களுடன் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் தேசிய பசுமை இயக்கம், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget