நேற்று முதல் அமுலாகும் வகையில் இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) அனுமதித் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டின் எந்தவொரு மூலையிலிருந்தும் செயற்கைக் கோள் மூலமான இணைய சேவைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு திருத்த சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதோடு 2024 ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் இந்த அனுமதி நடைமுறைக்கு வருகிறது.
இலங்கையில் தற்போதுள்ள பைபர் தொழிநுட்ப இணைய சேவையை விட இந்த இணைய சேவையானது பல மடங்கு வேகமானது என்பதனால் உலகில் எந்த இடத்திலிருந்தும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
Post a Comment