இப்பயணிகள் கப்பல் போக்குவரத்தை புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாகை மக்களவை உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
இன்று பிற்பகல் 12.15 மணிக்கு 44 பயணிகளுடன் குறித்த கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு தனது பயணத்தை தொடங்கியது.
பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாளை காலை 10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும்.
மீண்டும் ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் நாள்தோறும் நாகப்பட்டினத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் சிவகங்கை கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும்.
பின்னர் இலங்கையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன. ஒருவழி பயணச் சீட்டு இருக்கைக்கு 5,000 ரூபாவும், பிரீமியம் இருக்கைக்கு 7,500 ரூபாவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 கிலோ எடை கொண்ட உடைமைகள் மட்டுமே பயணிகள் எடுத்து செல்லலாம்.
Post a Comment