காலியின் நெலுவ பகுதியில் 191.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல தாழ்வு பகுதியில் நிலவும் தளம்பல் நிலைமையே பலத்த மழைவீழ்ச்சி பதிவாக காரணமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்ககூடும் எனவும் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் இடிமின்னல் தாக்கமும் ஏற்படுவதால் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குக்குலேகங்கை நீர்த்தேக்க வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் நீர்த்தேக்கத்தின் தாழ்நில பகுதிகளில் புளத்சிங்கள, அகலவத்தை, பரகொட மற்றும் மொல்காவ பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment