Ads (728x90)

தபால் வாக்காளர் அட்டைகளை நாளை தபால் நிலையங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குகள் அடங்கிய பொதிகளை நாளை தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதனை தொடர்ந்து வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget