இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்களை (e-ticket) கைத்தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை நேற்று முதல் செயற்படுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.prawesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அனைத்து ரயில் பயணங்களுக்குமான பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, குறுகிய தூரம் பயணிக்கும் புகையிரத பயணிகள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இணையத்தளத்தில் பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும், ஆனால் எதிர்காலத்தில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் புதிய முறையை அமல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment