Ads (728x90)

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து அவற்றை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும் தலைவர்களைத் தெரிவு செய்வதால் பாதிப்பே ஏற்படக்கூடும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

தங்களது சுயலாபத்துக்காக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் மற்றும் போலியான தகவல்களை எமது தலைவர்கள் வழங்கி வருவதாகவும், கடந்த 75 வருடமாக இவ்வாறான செயற்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்தும் தங்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாட்டின் பெரும்பாலானோர் தமது கொடுப்பனவிற்கேற்ப வாழ்க்கையை முன்கொண்டு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் வளம் பகிர்ந்தளிக்கப்படும் வகையிலான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள பேராயர், போலி தகவல்களை வழங்கும் தலைவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget