எம்பாக்ஸ் அல்லது குரங்கம்மை கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது. இது முதலில் கொங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 548 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரும் நிலையில் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குரங்கம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது.
அதேநேரம் இதற்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment