Ads (728x90)

தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தமானில் இருந்து நாகை வந்த ‘சிவகங்கை கப்பல்’ நாளை இலங்கைக்கு சோதனை பயணமாக வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023 அக்டோபர் 14ந்திகதி பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சிமூலம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

எனினும் ஒரேவாரத்தில் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது. இதற்கு இலங்கையை ஒட்டிய இலங்கை கடல்பகுதி கொந்தளிப்பாக காணபட்டதால் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், 2024 ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2024 மே 13ந்திகதி நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கும் என இன்டஸ்ரீ தனியார் கப்பல் சேவை நிறுவனம் அறிவித்தது. ஆனால் அதுவும் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 16ந்திகதி காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.5,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு ரூ.7,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget