Ads (728x90)

தேர்தல் ஒன்றை பிற்போடுவது தவறான செயல் என நீதிமன்றம் அங்கீகரித்தமை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய தேசியக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் அல்லது ஒத்திவைப்பதன் ஊடாக மக்களின் உரிமைகள் மீறப்படுவதாக உயர் நீதிமன்றம் இதற்கு முன்பும் பலமுறை தீர்ப்பளித்துள்ளது. 

எனினும் இந்த தீர்ப்பு தொடர்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நீதி வழங்கப்பட்டுள்ளதாகவே நான் காண்கிறேன்.

ஆனால் இது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் இந்த ஆண்டு இந்த வாக்கெடுப்பை நடத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget