தற்போது அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான 24,000 ரூபாவை 30,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய குறைந்த தரங்களுக்கு 24% அடிப்படை சம்பள அதிகரிப்பும், உயர் பதவிகளுக்கு 24% முதல் 50% வரையிலான அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு ஜனவரி 2025 முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ரூபா 25,000 வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதிய திருத்தத்தின் மூலம் அரச சேவையில் உள்ள மிகக் குறைந்த ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூபா 30,000 ஆகவும் வாழ்வாதார கொடுப்பனவுடன் கூடிய மொத்த சம்பளம் ரூபா 55,000 ஆகவும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment