Ads (728x90)

எசல பெரஹரா கடந்த மூன்றாம் திகதி அதிகாலை கண்டி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீநாத, ஸ்ரீ பத்தினி ஆகிய நான்கு தேவாலயங்களிலும் இடம்பெற்ற காப்புக் கட்டுதலுடன் ஆரம்பமாகியது. 

13 ஆம் திகதி ஆரம்பமான ரந்தோலி பெரஹரா ஊர்வலம் நேற்று இரவுடன் நிறைவடைந்தது. 

இதன் பொருட்டு நேற்று மாலை கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து ஆலயத்தின் பிரதம ரஷ்டி கோ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டி வாழ் இந்து பிரமுகர்கள், வர்த்தகபிரதிநிதிகள் என பலரும் நந்தி ஏந்தியவாறு மேள, தாள வாத்தியங்களுடன் தலதா வீதி வழியாக ஊர்வலமாக தலதா மாளிகைக்குச் சென்றனர். அங்கு இவர்களை தியவதன நிலமே வரவேற்றார்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹராவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பாரவையிட்டார்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க மற்றும்  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget