இலங்கைக்கு முடியும் ஆனால் ரணிலுக்கு முடியாது என்பதை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மாவனெல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாமல் சஜித் பிரேமதாச ஏன் தப்பிச்சென்றார் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்கள் போராட்டம் காரணமாக நாட்டின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ் பதவி விலகினார். அதனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தபோது, சஜித் பிரேமதாச 12.05.2022 ஆம் திகதி கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு அது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
குறித்த கடிதத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தார். குறிப்பாக குறித்த காலத்துக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும், 2 வாரங்களுக்குள் 19ஆம் திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் போன்ற நிபந்தனை தெரிவித்திருந்தார்.
இந்த நிபந்தனைகளை கோத்தாபய ராஜபக்ஷ் ஏற்றுக்கொள்ள மறுத்ததாலே சஜித் பிரேமதாச அன்று பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment