Ads (728x90)

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், வைப்புத்தொகைக்கான தற்போதைய 7.5% வட்டி வீதம் 2.5% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகரிக்கப்படும் வட்டி வீதத்தை அரச வங்கிகளுக்கு மானியமாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் அதிகபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வரையான நிலையான வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு 10% ஆக வழங்கப்பட உள்ளது.

இதனால் அதிகமான மூத்த பிரஜைகளின் வைப்புக்களிலிருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget