யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் நேற்று காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதி, காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கையில் தீச்சட்டிகளை ஏந்தியபடி முன்செல்ல தமிழ் கட்சி சார் உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் கோசங்களை எழுப்பியபடி பின் தொடர்ந்து இப்போராட்டத்தில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் திருகோணமலை கடற்கரைக்கு முன்னால் இடம்பெற்றது. பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு, வாய்களை கருப்பு துணியால் கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment