Ads (728x90)

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை நிறுவுவதற்கான மின் திட்டங்கள் இந்திய மானிய உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறித்த தீவுகளின் மக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களுக்காக 11 மில்லியன் டொலர் நிதியுதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் மின் திட்டங்களுக்கான நிதியுதவியின் முதல் கட்ட நிதியை இலங்கையிடம் இந்தியா வழங்கியுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷாவினால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன மற்றும் இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் சேபாலா ஆகியோரிடம் இது கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் இலங்கையும் இந்தியாவும் கையெழுத்திட்டன. அத்துடன் கடந்த மார்ச் மாதம் இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபை மற்றும் யு சோலார் கிளீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது ஆரம்ப கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இலங்கையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget