33 வது ஒலிம்பிக் திருவிழா பரிஸில் கடந்த ஜூலை 26 ம் திகதி கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 741 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமான சீன் நதியில் இப்போட்டி பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக் இப்போட்டியில் 42 வகையான விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இம்முறை ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தன.
கடந்த 16 நாட்களாக நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 91 பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 45 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடத்தில் உள்ளது.
Post a Comment