நீதியரசர்களான விஜித மலல்கொட, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது.
இதேவேளை மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யும் ஐ.ம.ச. கட்சியின் நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கட்சியின் முடிவை செல்லுபடியாக்குமாறு தெரிவித்து மனுக்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரிப்பதாக மூவரடங்கிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் காரணமாக அவர்கள் இருவரும் தங்களது நாடாளுமன்ற பதவிகளையும் இழந்தனர்.
Post a Comment