Ads (728x90)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு 2023 ஆம் ஆண்டு 21ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 12 மாதங்கள் வரை சிறை தண்டனையும், 2 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

ஜனாதிபதித் தேர்தலில் அதிகமான கள்ள வாக்குகளை அளிக்க சிலர் முற்பட கூடும் என பலக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளன.

இதனால் வாக்குப் பெட்டியை வாக்கு எண்ணும் தேர்தல் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது குறித்த வாகனத்துடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் இருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாகனத்தை பின்தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை மேல் நீதிமன்றத்தின் ஊடாக அளிக்க முடியும் என ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார்.

கள்ள வாக்கு அளிப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபா தண்டப்பணத்தை விதிக்க முடியும். அல்லது 12 மாதங்கள் சிறை தண்டனையை விதிக்க முடியும். அல்லது இரண்டு இலட்சம் அபராதத்துடன் தண்டனையையும் வழங்க முடியும்.

கள்ள வாக்கு அளித்த குற்றவாளியாக அடையாளம் காணப்படும் நபர்களுக்கு மேற்படி தண்டனைகளை விதிப்பதுடன், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வாக்களிக்கவும், வாக்காளர் பதிவேட்டில் பதியவும் தடைவிதிக்கப்படும் என்றும் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget