இந்திய அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வடக்கு ரயில்வேயின் புனரமைப்பு பணிகள் அநுராதபுரம் ஓமந்தை, அநுராதபுரம் – மிஹிந்தலை மற்றும் அநுராதபுரம் -மாகோ என மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையில் அநுராதபுரம் – மாகோ பகுதியின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு இப்புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து வடக்கிற்கான ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு தடத்தை கொண்ட ரயில் பாதை இரு தடங்களாக புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு செல்வதற்கு ஏழரை மணித்தியாலங்கள் தேவைப்பட்ட நேரம் தற்போது ஐந்தரை மணித்தியாலங்களாகக் குறையுமெனவும், மணிக்கு நூறு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் பயணிக்குமெனவும் சிந்தக ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
Post a Comment