Ads (728x90)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைத்ததன் மூலம் ஐந்தாண்டு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாத 85 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

1977 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க உறுப்பினர் ஓய்வூதியச் சட்டத்தின் விதிகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற உரிமையுடையவர்கள்.

சட்ட விதிகளின்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் முழு ஓய்வூதியம் பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் அடிப்படை பதவிக் காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பின்னர் உறுப்பினரின் அடிப்படை சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை பெற உறுப்பினருக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் 45,000 ரூபாவை வாழ்நாள் ஓய்வூதியமாக பெறுவார்கள்.

ஓய்வூதியத்தை இழந்த 85 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடாளுமன்றின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் 8 ஆம் திகதியுடனேயே ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget